Sunday, August 9, 2009

பூ அழகுதான்....

பூ அழகுதான்
உன் கூந்தலில்
இருக்கும்போது!

எல்லாம்
இருக்கிற இடத்தை
பொறுத்துதான் மதிப்பு
அந்த உண்மை
இந்த அக்றிணைக்கு
எப்படி தெரிந்தது?

சிரிக்கிறது பார்,
உன் தலை சிம்மாசனத்தில்
உட்கார்ந்திருக்கும்
திமிரில்!
நந்தவனத்தில் இருந்தது
கருவறை சிலையாய்
உன் கேசம் அமர்ந்ததும்
என்னமாய் ஒளியடிக்கிறது
தேரில் வலம் வரும்
உற்ச்சவமூர்த்தியாய்!

மெதுவாய் என்ன செய்கிறது...
சங்கப் பாண்டியனின் சந்தேகத்தை
பரிசீலித்து பார்கிறதா?
உன் முகத்தைவிடவா அது மஞ்சள்
உன் கண்களைவிடவா அது நீலம்
உன் பற்களைவிடவா அது வெள்ளை
உன் இதழ்களைவிடவா அது சிவப்பு


பிறகு எதற்கு ?
எடுத்தெறியேன்!
"ஏன் ஒரு மாதிரியாய்"
என்கிறாய்
ஒன்றும் தெரியாதவள் போல.....

சின்ன கோபத்துடன்
சிணுங்கலுடன்
ஏறெடுத்து பார்கிறேன்
உன் தலையை....
பூ இவ்வளவுதானா
புன்னகை செய்கிறாய்
கோதிவிட
கையைக்
கூந்தலுக்கருகில் கொண்டுவருவேன்
தாயின் முந்தானையை பிடித்துக்
கொள்ளும்
குழந்தையை போல
முறைக்கிறது அது
பூ அழகுதான்
உன் கூந்தலில் இருக்கும் போது
உன் கூந்தல் அழகுதான்
பூ இல்லாதபோதும்
எப்போதும்.
-மீரா

No comments:

Post a Comment