பிடிவாதமாய்
இடம் மாறி மாறி
மறைந்திருக்கும் உனது
பாறைப் பிரியங்களில் பொழிவிக்க
காத்திருக்கும் அடர்மழையை
காற்றை அலைக்கழிக்கும்
பிரியங்களில் நிழற்குடை
கடும் சிரமத்தோடு தன்னை
ஆழப் பற்றிக் கொண்டு
உனது வெயிலிலும் மழையிலும்
நனைந்தபடி தந்திருக்கும் நிழலினை
பெருங்கருணையோடிருக்கும்
பிரியங்களுக்கும்
பிரியமென்பதை தவிர
காரணிகள் வேறு
எப்போதுமில்லை.
-லாவண்யா சுந்தரராஜன்
No comments:
Post a Comment