skip to main |
skip to sidebar
நானும்நீயும்ஒரே மழையில்நீகுளிருகிறது என்றபோதுநானும்குளிருகிறது என்றேன்ஒரே மழைஒரே நேரத்தில்குளிர்விக்கிறதுவெவ்வேறாய் இருக்கும்ஒன்றை-கோகுலக்கண்ணன்.
சிறகுகளைஒவ்வொன்றாய் பிய்த்து போட்டபடிஅந்த கானக வெளியினைக் கடந்தேன்என்னைத் தேடி வரும் அவனுக்குநான் காணாமல் போவதையும்அடையாளப்படுத்தி..நெடுநாட்களாகியும்யாரும் தேடி வராத நிலையில்காய்ந்த குருதிதுளிகள்தக்கைகளாயும்சிறகுகள் இடமாறியும்போயிருந்தனவென்றுஎனக்கு பின்னால் வந்தபருந்தொன்றுசொல்லிச் சென்றது..சிதைந்த என் அடையாளங்களைத் தேடிமீண்டும் வந்த வழி திரும்பினேன்..சிறகுகளேதும் காணப்படாத நிலையில்துயருற்று முள் மரத்தின் அடியில்மருகி நிற்கையில்அதன் கிளையொன்றில்என் அத்தனை இறகுகளும்சேகரிக்கப்பட்டிருந்ததுஅருகிலேயே பாதுகாப்பாய்அவனும்..- இசை பிரியா.
முட்டக் குடித்துதன்னிலை மறந்து தூங்கஆயிரம் காரணங்கள் இருப்பதாகசொன்னவனிடம்ஒரே ஒரு காரணம் மட்டும்சொல்லும்படி கேட்டவளிடம்சொன்ன காரணத்தைஇதெல்லாம் ஒரு காரணமா?என்றவளையும் சேர்த்துஇப்ப இவனிடம்ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.-பா.ராஜாராம் .
‘அப்பா...ஒரு கதை சொல்லு’ஓடி வ்ந்தாள்ஒன்றாம் வகுப்பு மீனாட்சி. ஆர்வத்துடன் ஆரம்பித்தேன்‘முயலுக்கும் ஆமைக்கும்ஓட்டப் பந்தயம்முயல் உறங்கஆமை வென்றது’அபிநயத்துடன்அரங்கேற்றினேன். ‘போப்பா!தப்புத் தப்பா சொல்றே...மெள்ள நகரும் ஆமைக்கும்துள்ளி ஓடும் முயலுக்கும்போட்டி என்பது நியாயமா?’ ஒன்றாம் வகுப்பின்கேள்வியால்நூற்றாண்டுத் தத்துவம்நோடியில் உடைந்தது. கேள்வியே கல்வி என்றுஇப்போது புரிந்ததும்...ம்...பள்ளிக்குப்போக வேண்டியதுமீனாட்சியல்ல! -அமிர்தநேயன்.
சன்னலோர இருக்கையில்அமர்ந்திருந்த பேரிளம்பெண்அவ்வளவு அழகாயிருந்தாள்அவளருகில் அமர்ந்திருந்த கணவனைநான் பார்க்கவும்வானில் கடூரமாகஇடி இடிக்கவும்சரியாகயிருந்ததுநின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளைகேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்யாரோ ஒருவரின் குழந்தையைஆவல் ததும்ப வாங்கிமடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்ஒரு ஏக்கம் தெரிந்ததுவிதிவிலக்காக அவளொருத்தி மட்டும்சன்னலைத்திறந்துவைத்துமழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்அவள் முகம் மறந்தாலும்என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்அவள் கழுத்திலிருந்தசுருக்குக் கயிற்றின் தடம்-- கல்குதிரை(பனிக்காலங்களின் இதழ்) ஆசிரியர், எழுத்தாளர் கோணங்கி & கவிஞர் வெய்யில்
இல்லையென்று பதிலளிக்கும்எல்லோர் வீட்டின் வாசலிலும்தூக்கங்களைக் களவு கொள்ளும்கனவொன்றைவிட்டுச் செல்கிறார்தொலைந்துபோன மகனைநள்ளிரவில்தேடியலையும் அப்பா .-கவிஞர் கே.ஸ்டாலின்
ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்றுஎலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்அப்படித்தான் சொல்கிறதுபழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்துமெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்குமிகவும் வியப்பை ஏற்படுத்துகிறதுஅச்சமூட்டுகிறதுமரியாதையை ஏற்படுத்துகிறதுபெருமையளிக்கிறதுமெய்சிலிர்க்கவைக்கிறதுதன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்டடெஸ்டரை முதன்முறையாகப்பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்தன்வாழ்வின் தோள்மீதுகைபோட்டு அரவணைத்துக்கொண்டுபின்தொடரச் செய்த மின்சாரத்திற்குநன்றி சொல்லிக்கொள்கிறான்யாருமற்ற அந்நேரத்தில்மெல்ல எழுந்துஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கிஇருகைகளாலும் பயபக்தியோடு தொட்டுகண்ணீர் துளிர்க்கும் விழிகளில்ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்.-ச.முத்துவேல்.