
உனைத்தரிசிக்க வரும் உன்மகளை
உன்மகனே கேலிசெய்கிறான்
அழகி மீனாட்சி!
உன்காலத்தில்
எப்படி நீ உலாப்போனாய்?
-இரா.மீனாட்சி ('இரா.மீனாட்சி கவிதைகள்')

தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.
-ஜீ.ஆர்.விஜய்.

காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்.
-பெயர் தெரியவில்லை .
யானை கட்டி
போரடித்தால் தேறாது
என்று
பூனை கட்டி போரடிக்கும்
சோழ நாடு.
-பெயர் தெரியவில்லை . நாடு சுடுகாடாய்
இருப்பதால்
உலக அதிசயமாய்
ஒரு கல்லறை!
-கபிலன் . பசுவுக்கு
உண்ணி பிடுங்கி கொண்டிருக்கும்
அப்பாவும்
ஆட்டுகுட்டியை
மடியில் போட்டு
ஈத்தி கொண்டிருக்கும்
அம்மாவும்
படித்ததில்லை
" உயிர்களிடத்தில் அன்பு வேணும் "
-இளம்பிறை .கந்தை ஆனாலும் கசக்கி கட்டு
சரி
காயும் வரை எதை கட்டுவது?
-பெயர் தெரியவில்லை .அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.
-கல்யாண்ஜி.
No comments:
Post a Comment