Saturday, April 4, 2009

அம்மா அழாதே


அம்மா அழாதே
நமது துயரை சுமக்க மலைகள் இல்லை
உனது கண்ணீர் கரையவும்
ஆறுகள் இல்லை

தோளிலே தாங்கிய குழந்தையை
உன்னிடம் தந்ததும்
வெடித்து துவக்கு


புழுதியில் விழுந்த உன் தாலியின் மீது
குருதி படிந்தது


சிதறிய குண்டின் அனல் வெப்பத்தில்
உன் வண்ணகனவுகள் உலர்ந்தன.


நின் கால்சிலம்பிடை இருந்து தெறித்தது
முத்துகள் அல்ல,
மணிகளும் அல்ல
குருதி
என்பதை உணர்கிற பாண்டியன்
இங்கு இல்லை.



துயிலா இரவுகளில்
"அப்பா " என்று அலறி துடிக்கிற
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய்
?

உலவி திரிந்து நிலவை காட்டி
மார்பில் தாங்கி
"அப்பா கடவுளிடம் போனார்"
என்று சொல்லாதே


துயரம் தொடர்ந்த வகையை சொல்
குருதி படிந்த கதையை சொல்
கொடுமைகள் அழிய
போரிட
சொல்.


நீ இபொழுது இறங்கும் ஆறு - சேரன்

1 comment:

  1. எம் மக்களுக்கு கண்ணீர் வருகிறதா!
    எனக்கு வர நெஞ்சில் இதைப் பார்க்கும் சக்தியில்லை
    கண்களில் தண்ணீர் கடந்த 32 வருடங்களாக அழுது வற்றி விட்டதே!

    ReplyDelete