skip to main |
skip to sidebar
சன்னலோர இருக்கையில்அமர்ந்திருந்த பேரிளம்பெண்அவ்வளவு அழகாயிருந்தாள்அவளருகில் அமர்ந்திருந்த கணவனைநான் பார்க்கவும்வானில் கடூரமாகஇடி இடிக்கவும்சரியாகயிருந்ததுநின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளைகேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்யாரோ ஒருவரின் குழந்தையைஆவல் ததும்ப வாங்கிமடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்ஒரு ஏக்கம் தெரிந்ததுவிதிவிலக்காக அவளொருத்தி மட்டும்சன்னலைத்திறந்துவைத்துமழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்அவள் முகம் மறந்தாலும்என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்அவள் கழுத்திலிருந்தசுருக்குக் கயிற்றின் தடம்-- கல்குதிரை(பனிக்காலங்களின் இதழ்) ஆசிரியர், எழுத்தாளர் கோணங்கி & கவிஞர் வெய்யில்
இல்லையென்று பதிலளிக்கும்எல்லோர் வீட்டின் வாசலிலும்தூக்கங்களைக் களவு கொள்ளும்கனவொன்றைவிட்டுச் செல்கிறார்தொலைந்துபோன மகனைநள்ளிரவில்தேடியலையும் அப்பா .-கவிஞர் கே.ஸ்டாலின்
ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்றுஎலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்அப்படித்தான் சொல்கிறதுபழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்துமெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்குமிகவும் வியப்பை ஏற்படுத்துகிறதுஅச்சமூட்டுகிறதுமரியாதையை ஏற்படுத்துகிறதுபெருமையளிக்கிறதுமெய்சிலிர்க்கவைக்கிறதுதன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்டடெஸ்டரை முதன்முறையாகப்பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்தன்வாழ்வின் தோள்மீதுகைபோட்டு அரவணைத்துக்கொண்டுபின்தொடரச் செய்த மின்சாரத்திற்குநன்றி சொல்லிக்கொள்கிறான்யாருமற்ற அந்நேரத்தில்மெல்ல எழுந்துஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கிஇருகைகளாலும் பயபக்தியோடு தொட்டுகண்ணீர் துளிர்க்கும் விழிகளில்ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்.-ச.முத்துவேல்.
அக்காவின் பைபிள்அக்காவின் பைபிளில் இருப்பவை:தையல் விட்ட ரேஷன் கார்டுகடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்கந்துவட்டிக்காரர்களின் அட்டைதிருவிழா, பண்டிகை நோட்டீசுகள்அண்ணன் குழந்தையின் போட்டோகுட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்ஒரு நூறு ரூபாய் நோட்டுஎஸ்எஸ்எல்சி புத்தகம்.அக்காவின் பைபிளில் இல்லாதவை:முன்னுரைபழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுநிலப்படங்கள்சிவப்பு மேலட்டை.-மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்.தமிழில் : சுகுமாரன்
ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்
அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?
-(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)
சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி
தமிழில் மதுமிதா.
கதைச் சொல்லுகதைச் சொல்லுஎனக்கொரு கதைச் சொல்லு.உன் கதையில்..ஏழு கடல்கள்இடியுடன் கூடிய புயல்தீ கக்கும் டிராகன்இவர்களுடன் இருக்கட்டும்அரக்கனைப் பரிகாசம் செய்யும்ஒரு சின்னப் பச்சைக்கிளிமுத்துக்களைக் கொறித்துக்கொண்டு.இருக்கட்டும்முடிவில்லாத சிக்கலான பாதைவெளிவரமுடியாமல்ஒவ்வொரு படியிலும்தடைக்கற்கள்பயப்படவில்லை.இந்த மாதிரிக் கதைகளைஎனக்குத் தெரியும்.எல்லா கதைகளிலும்எப்போதும்கடைசியில்இனிமையாக வாழ்ந்ததாகசுபமாக முடியும் என்று.கதைச் சொல்லுஎனக்கு.மூச்சுத் திணறும் அணைப்பில்வேப்பமரத்தடியில்அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..கதைச் சொல்லு எனக்கு.உன் கதைக் கேட்டுஅடிப்பட்ட மான் போலதுடிதுடித்து அழவேண்டும்.கதை முடிவில்தொலைந்து போன குழந்தைகள்சந்தர்ப்பவசத்தால்ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..கதைச் சொல்லு எனக்கு.ஒரே ஒரு ஊரில்ஓர் இளவரசியாம்அவளைக் காதலித்தானாம்துணிகளை வெளுக்கும் அவன்..இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..கதைச் சொல்லு எனக்கு.கதைச் சொல்லு.- பிரதிபா நந்தகுமார்.
நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்
- சல்மா.